உன்பெயர்
September 01, 2014
புதுப்பேனா கிறுக்கலில்
பதிந்தது உன்பெயர்..
திரும்பிய காசோலை
கையெழுத்தில் உன்பெயர்..
கடற்கரை அலைகளால்
கவர்ந்தது உன்பெயர்..
புதுக்குழந்தை பெயர்கேட்க
சொன்னது உன்பெயர்..
புத்தகக் கடைசிபக்க
ஓவியத்தில் உன்பெயர்..
அர்த்தங்கள் தேடித்தேடி
இணையத்தில் உன்பெயர்..
அடுத்தகவிதை தலைப்பாக
காகிதத்தில் உன்பெயர்..
எனையறியாமல் எழுதுகிறேன்
எனதருகே உன்பெயர்..
-posted from blogMate for windowsphone.