மிட்டாய் கவிதைகள்!

பிச்சைக்குழந்தை

July 23, 2013

pichai kulanthai

சிலந்திக் கூடும் சிக்குத் தலையும்
போகி மழையில் எரியாத் துணியும்
தண்ணீர் என்பது குடிக்க மட்டுமென
மண்ணின் பிள்ளைகள் நின்ற பேருந்தில்!

பச்சிளம் குழந்தை பிஞ்சுக் கைகளில்
பாலுண்டு நாளாக கண்களில் நீருடன்
உதவச் சொல்லி கால்களைத் தொடுகையில்
உள்ளம் உருகி சில்லறை சிதறும்!

இறக்கம் கொண்டு தட்டில் இட்டால்
தட்டில் விழும் ஒற்றை ரூபாய்க்கு
இரண்டு ரூபாய் அடுத்த இலக்காகி
இவளின் பிள்ளையும் பிச்சை எடுக்கும்!

உணவும் உடையும் இருக்க இடமும்
உயரத் தூக்கும் கல்வியைத் தருகின்ற
உதவும் கரங்களில் சேர்த்து விடுங்கள்
உதவி என்று சில்லறையை உதராதீர்கள்!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்