வகுப்பறை
July 22, 2013
புத்தகம்
செவியைத் தீண்டிடும் சொற்கள் யாவும்
ஓவிய னாக்கிடும் வெள்ளைத் தாளில்!
மேசை
பாடம் எல்லாம் தாலாட் டானதால்
கனவுகள் சுமக்கும் ஆடாத் தொட்டில்!
சுண்ணக்கட்டி
ஓவியம் பலவும் வரைந்து விட்டு
உடனே உயிர்விடும் ஒற்றைக் காலன்!
கரும்பலகை
கற்றது பலநூறு கையளவு எனினும்
கொஞ்சமே கற்பிக்கும் பெரிய கருமி!